Posts

Showing posts from September, 2021

காமம் காமமென்ப...

  “இந்த கெரகத்த எங்காச்சும் மல மேல இருந்து தள்ளீட்டு, இன்சூரன்ஸ் பணத்துக்கு ஐடியா போடுறேன்..” குமரப்பன் பேச்சுல உதடுதான் அசஞ்சுது. முந்தா நாள் மதியம், நவி மும்பையில இருந்து லாரி கிளம்புறப்போ, வண்டியில ஏறி உட்கார்ந்ததும் பய பக்தியோட ஸ்டியரிங்கை தொட்டு நெத்திக்கு வெச்சு கும்பிட்டுக்கிட்டத்த  நானே பார்த்தேன்.  “இன்சுரன்ஸ் பணத்த வாங்கிட்டு சிவனேன்னு ஊருக்குள்ளயே ஒரு பொட்டிக்கடைய வெச்சுட்டா இமுசு இல்ல.. வாப்பா போலாம்.. ஆத்துல ஒரு குளியல போட்டாத்தான் மேற்கொண்டு வண்டியோட்ட முடியும்.” குமரப்பனுக்கு பெருத்த உடல். கசங்கிய லுங்கிக்கு மேல் அந்த அழுக்கான ஆரஞ்சு முண்டா பனியன், ஊளைச் சதையைப் பிதுக்கியது. சொட்டை முன் மண்டையில் இருந்து உச்சிக்கேறி பின் மண்டையில் மயிரை கீழே தள்ளி வருகிறது.  அத்தப்பெரும் உடலுடன் லாரியின் மேல் ஏறுவதிலும் இறங்குவதிலும் அத்தனை சாதூர்யம்.  “ஹேக்..” அவர் குதித்ததும் என் வயிற்று கொழுப்புச் சதை குலுங்கியது. “லாரியில ஏறுறது எறங்கறது எல்லாம் ஒரு கலை பாத்துக்க..” 'மூன்றாம் உலகப் போரின் கடைசி குண்டு' படத்துக்கு முனிஸ் காந்த் லாரி ஓட்டும் காட்சிகளுக்கு எத்தனை...